புதிய அரசமைப்பு தொடர உறுதியான அரசு தேவை: இரா.சம்பந்தன்!

நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடா­ளு­மன்­றத்­துக்குக் கடந்த வியா­ழக்­கி­ழமை வந்­தி­ருந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் சந்­தித்­துப் பேசி­னார்.

தேசி­யப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கும், புதிய அர­ச­மைப்பை வரை­வ­தற்­கும் உறு­தி­யான அரசை உரு­வாக்­கு­வது முக்­கி­யம் என்­றும் சம்­பந்­தன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இந்­தச் சந்­திப்­பின் போது வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பா­க­வும் பேசப்­பட்­ட­தாகத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.