அம்பாறை கலவரத்திற்கு சம்பந்தன் கடும் கண்டனம்

அம்பாறையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த வன்முறை சம்பவத்தை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களிடையே இனமுறுகலை தோற்றுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்க வேண்டுமென சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.