பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்! கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை

மட்டக்களப்பு – களுதாவளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு களுதாவளை பகுதியில் வீசிய மினிசூறாவளி காரணமாக கொச்சி செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிகளுக்கு சென்ற அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் பாதிப்புகள் தொடர்பில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்புகொண்ட அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்ட ஈடுகளைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.