இறுதி யுத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! வடக்கு முதலமைச்சர் விடுத்த கோரிக்கை!

இறுதி யுத்தத்தின் போது நடந்தவற்றை நேரில் பார்வையிட்ட சாட்சி ஒருவரின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை மேற்கொண்டுள்ளது. அண்மையில் வடமாகாண சபையின் உறுப்பினராக பதவி பிரமானம் செய்துகொண்ட எஸ்.குகதாஸ், சபையில் தனது கன்னி உரையினை வழங்கியிருந்தார்.

தனது உரையின் போது, “யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துன், இறுதி யுத்ததின் போது ஐந்து லட்சம் பேர் வடக்கில் இருந்ததாகவும், 3 லட்சம் பேர் மட்டுமே தப்பித்தனர் எனவும், ஏனையவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், யுத்தம் குறித்து பேசியிருந்த இந்த விடயங்களை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வடமாகாண சபை, அந்த உரையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.