பொருத்து வீட்டிற்கு மாற்றாக அமைக்கப்படவுள்ள மாற்றுவீட்டினை பார்வையிட்ட கூட்டமைப்பின் குழு!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுட்டுத் திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டு புதிதாக 60 ஆயிரம் கல்வீடுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளன.

இந்த மாதிரி கல்வீடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன் பணிப்பின் பெயரில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன் , சி.யோகேஸ்வரன், சிறிநேசன் உள்ளிட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பதுளைக்குச் சென்று மாதிரி வீடுகளைப் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இவ் வீடமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக கட்டி வழங்கப்படவுள்ள 12 அரை லட்சம் ரூபா (1.25 மில்லியன் ) பெறுமதியிலான கொங்ரீட் வீடுகளின் மாதிரி வீடுகள் சில தற்போது பதுளையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கட்டி முடித்த நிறுவனம் வடக்கு கிழக்குப் பகுதியிலும் இத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகளை விரைவில் கட்டுவதற்கான ஒப்பந்தத்தினை பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.

இதன் காரணத்தினால் ஏற்கனவே 23 லட்சம் ரூபாவில் அமைக்க எண்ணிய பொருத்து வீட்டினால் பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டு அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பின் கடும் முயற்சிகள் மேற்கொண்டவேளையில் மீள்குடியேற்ற அமைச்சருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் கடும் முறுகல் நிலமையும் ஏற்பட்டது.

இதனால் குறித்த திட்டம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக தற்போது கூட்டமைப்பினர் அரசிடம் கோரிய கல்வீடுகளை அதேநிறுவனங்கள் மூலம் அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதன் பிரகாரம் எதிர்காலத்திலும் கருத்து முரன்பாடு அமையாது இருப்பதற்காக முற்கூட்டியே மாதிரி வீடுகளையும் நேரில் பார்வையிட்டு அதற்கான ஒப்புதலை தெரிவித்தால் ஜனாதிபதியுடன் உடனடியாக உரையாடி அதற்கான ஒப்புதலையும் திட்டத்தினை விரைவு படுத்த முடியும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

இதனையடுத்தே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களானா சிவஞானம் சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன் , சி.யோகேஸ்வரன், சிறிநேசன் உள்ளிட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஸ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை பதுளைக்குச் சென்று மாதிரி வீடுகளைப் பார்வையிட்டு நேற்றைய தினம் தமது அறிக்கைகளை தலைவரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த அறிக்கையின் பிரகாரம் மேற்படி வீடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில். அமைக்க முடியும் என்றும் இதன் மாதிரி வீடுகள் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இடவேண்டும் எனவும் இவ் வீட்டின் கட்டுமானத்தில் சில மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் சிபார்சு செய்துள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுட்டுத் திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டு புதிதாக 60 ஆயிரம் கல்வீடுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளன.

இந்த மாதிரி கல்வீடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன் பணிப்பின் பெயரில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன் , சி.யோகேஸ்வரன், சிறிநேசன் உள்ளிட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பதுளைக்குச் சென்று மாதிரி வீடுகளைப் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இவ் வீடமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக கட்டி வழங்கப்படவுள்ள 12 அரை லட்சம் ரூபா (1.25 மில்லியன் ) பெறுமதியிலான கொங்ரீட் வீடுகளின் மாதிரி வீடுகள் சில தற்போது பதுளையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கட்டி முடித்த நிறுவனம் வடக்கு கிழக்குப் பகுதியிலும் இத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகளை விரைவில் கட்டுவதற்கான ஒப்பந்தத்தினை பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.

இதன் காரணத்தினால் ஏற்கனவே 23 லட்சம் ரூபாவில் அமைக்க எண்ணிய பொருத்து வீட்டினால் பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டு அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பின் கடும் முயற்சிகள் மேற்கொண்டவேளையில் மீள்குடியேற்ற அமைச்சருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் கடும் முறுகல் நிலமையும் ஏற்பட்டது.

இதனால் குறித்த திட்டம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக தற்போது கூட்டமைப்பினர் அரசிடம் கோரிய கல்வீடுகளை அதேநிறுவனங்கள் மூலம் அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதன் பிரகாரம் எதிர்காலத்திலும் கருத்து முரன்பாடு அமையாது இருப்பதற்காக முற்கூட்டியே மாதிரி வீடுகளையும் நேரில் பார்வையிட்டு அதற்கான ஒப்புதலை தெரிவித்தால் ஜனாதிபதியுடன் உடனடியாக உரையாடி அதற்கான ஒப்புதலையும் திட்டத்தினை விரைவு படுத்த முடியும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

இதனையடுத்தே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களானா சிவஞானம் சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன் , சி.யோகேஸ்வரன், சிறிநேசன் உள்ளிட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஸ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை பதுளைக்குச் சென்று மாதிரி வீடுகளைப் பார்வையிட்டு நேற்றைய தினம் தமது அறிக்கைகளை தலைவரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த அறிக்கையின் பிரகாரம் மேற்படி வீடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில். அமைக்க முடியும் என்றும் இதன் மாதிரி வீடுகள் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இடவேண்டும் எனவும் இவ் வீட்டின் கட்டுமானத்தில் சில மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் சிபார்சு செய்துள்ளனர்.