இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் கலந்துரையாடல்!

லங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாக மற்றும் பிரதேச இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று மட்டக்களப்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், சிரேஸ்ட உபதலைவர் பொன் செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2018ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒன்றுகூடலாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அத்துடன், இதன் போது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிலைமை, கட்சியின் மாவட்ட ரீதியான எதிர்கால செயற்பாடுகள், மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.