தமிழரசு கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்கான ஆய்வு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்கான ஆய்வு கூட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்காண காரணங்கள் என்ன என்பதை பிரதேச மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொள்வதோடு கூட்டு அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கும் இந்த ஆராய்வு கூட்டம் நடைபெற்றுள்ளதாக நியமிக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், சத்தியலிங்கம், வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.