பரபரப்பாக கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு: எவ்வித முடிவும் எடுக்காமல் கலைந்தது!

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிறைவடைந்திருக்கிறது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படாத நிலையில், அதைப்பற்றி எதற்காக தேவையற்று அலட்டிக்கொள்ள வேண்டும் என இன்று முடிவெடுத்துள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால்இ அதன்பின்னர் கூடி, அடுத்து என்ன செய்வதென முடிவெடுக்கலாமென இன்று தீர்மானித்துள்ளனர்.