கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் சபாநாயகர் தலைமையிலான இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழு!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சர்வகட்சிக் குழுவொன்று இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே விஜயம் மேற்கொள்வது தொடர்பான முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்லவுள்ள இந்த குழு, பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்புகளையும் நடத்தவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.