அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்பு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட சமகால களநிலவரம் தேர்தலின் போதான சாதகபாதக நிலைமைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய யோசனைகள் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்டறியும் அமர்வு காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த அமர்வு இன்று காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் காலை 9.30மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், கருத்தறியும் குழுவின் தலைவர் கனடா கே.குகதாசன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி. பா.அரியநேத்திரன், பொதுமக்கள் என பலரம் கலந்து கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் பொதுமக்களுக்கு இதன்போது தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து வந்த தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர் என குறிப்பிடப்படுகின்றது.