புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பு நேரடியாக ஆட்சியமைக்கும்:

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக ஆட்சியமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 12 வட்டாரங்களில் 11 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக வெற்றி பெற்றது.

இதன் மூலம் 20 ஆசனங்கள் என வர்த்தமானி அறிவித்தலில் இருந்தும், பின்னர் வந்த தொங்கு பட்டியலால் ஆசனங்கள் 22ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தனிக் கட்சியாக 50% ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்ததால் நேரடியாக ஆட்சியமைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

பலத்த விமர்சனங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட பிரதேச சபைகளில் புதுக்குடியிருப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.