செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் இன்றைய தினம் 10.30 மணியளவில் மன்னார் பிரதேசச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது கடந்த வருடம் இடம் பெற்ற மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும், கிராம அலுவலகர்கள், கிராம மட்ட தலைவர்கள் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் மரியதாசன் பரமதாசனின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான அலிக்கான் சரீப், எஸ்.எம்.ஏ.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.