பூநகரி பிரதேச மக்களிற்கு உதவிகள் வழங்கப்பட்து!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

20 மில்லயன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை 11.30 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய நல்லிணக்க செயலணியின் ஒழுங்குபடுத்தலில் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பா.உ மாவை சேனாதிராஜா, அமைச்சின் செயலாளர் சிவஞானமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது137 மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகளும், 2 மீனவர்களிற்கு மீன்பிடி வள்ளம் மற்றும் மீன்பிடி வலைகள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜெனீவா சென்ற காரணத்தினால் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்