வடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடைவிதித்தார் வடக்கு முதல்வர் விக்கி!

வடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

இதுதொடர்பான அறிவுறுத்தலை தாம் பொலிஸாருக்கு வழங்கி இருப்பதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரதானிகளுடன் வடக்கு முதலமைச்சர் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.

அதிக இரைச்சலுடன் ஒலிக்கின்ற ஒலிப்பெருக்கிகளால் தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.