வர்த்தமானி வெளியாகாததால் சத்தியப்பிரமாண நிகழ்வை ஒத்திவைத்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்படாமையாலேயே பிற்போடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வை யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுடன் இணைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை வெளியீட்டையும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி இதுவரையில் வெளியாகவில்லை.

அதனால் சத்தியப்பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. இருப்பினும் பத்திரிகை வெளியீடு திட்டமிட்டவாறு நேற்று நடைபெற்றது.