தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலமர்வு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கு செயலமர்வு ஒன்று கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது,

மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இன்று ஞாயிறு காலை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ் செயலமர்வு காலை 9 மணி தொடக்கம் பி.ப 2 மணிவரை நடைபெறுகிறது.

உள்ளூராட்சி சபை சட்டம், நிதிப்பிரமாணம்,
அமர்வுகள் தொடர்பான விளக்கம், சபை நடவடிக்கை, போன்றவற்றிக்கு இந்த செயலமர்வில் தெளிவூட்டல் வழங்கப்படவுள்ளது.

செயலமர்வின் விரிவுரைகள் தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட 79 கௌரவ உறுப்பினர்களும்,
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட 27 கௌரவ உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.