தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.உ சுமந்திரன் அமெரிக்கா சென்றார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களுக்கு அங்கு தங்கியிருக்கவுள்ள சுமந்திரன், அந்த நாட்டில் உள்ளஅரச அதிகாரிகளையும், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதிஉள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் குறித்தும் அவதானம்செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவரதுஇந்த விஜயம் அமைகிறது.