ஆனந்தசங்கரியின் ஆதரவைக் கோரும் செல்வம் அடைக்கலநாதன்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து ஆட்சியமைக்க முடியாதுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியை கோரியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தது.

இதில் வெற்றிப் பெற்ற உறுப்பினர்கள் யாரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உதவ கூடாது என்றும், அவ்வாறு உதவினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த தீர்மானத்தை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.