சுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு! ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்!

நல்லாட்சி என்ற சொல்லை இலங்கையில் கூடிய ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். தவிர தமிழர்கள் அதனை நல்லாட்சி என்று சொல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இதன்போது லங்காசிறி 24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு இன்னும் சரியான நடிவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் மேலோங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.