அரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும்! சம்பந்தன்

தமிழ் மக்கள் குறித்து சிங்கள மக்களை தெளிவுப்படுத்தி, அதற்கான நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமை என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர் கட்சித் தலைவரும் சிரேஷ்ட தமிழ்த் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இனச் சிக்கல் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றத. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் குறித்து சிங்கள மக்களை தெளிவுப்படுத்தி, அதற்கான நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர்.