ஜனாதிபதி மைத்திரி முழு உலகத்திற்கும் தலைவராக முடியும்! யாழில் சம்பந்தன் தெரிவிப்பு !

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதன் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்துக்கும் தலைவராக முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் தற்போது தனி நாட்டைக் கேட்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். புனித பற்றிக்ஸ் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு

நாட்டை இப்படியே கொண்டு செல்ல முடியாது. நாடு மிகப்பெரிய துன்பங்களையும், பொருளாதார ரீதியான பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது.

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. இலங்கையை விட பின்தங்கி இருந்த பல நாடுகள் தற்போது முன்னேறியுள்ளன.

எனவே, தாம் எதிர்கொள்கின்ற சவால்களில் இருந்து ஜனாதிபதி வெளிவர வேண்டும். தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.

அவ்வாறு ஜனாதிபதி செய்வாராக இருந்தால், சர்வதேச சமூகம் அவரை உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என அங்கீகரிக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.