யாழில் அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறந்து வைப்பு!

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர் கட்சித் தலைவரும், மூத்த தமிழ்த் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். சுழிபுரம் வலி மேற்கு பிரதேசசபை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலையினை எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

இது குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர்.