தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஈ.சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.