நியூயோர்க்கில் ஐநா பிரதிநிதியை சந்தித்தார் சுமந்திரன் எம்.பி

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அண்மையில் அமெரிகாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மனை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற சுமந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வண. பிதா சீ.யோ. இம்மானுவெல் அடிகளாரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.