மைத்திரியை சந்திக்கவுள்ள சிறீதரன்!

ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்த சுதாகரனை உடனடியாகவே பொதுமன்னிப்பு அளித்து நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டி நா.உ சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தத சுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இவருடைய இறுதிக் கிரியைகள் நேற்று கிளிநொச்சி, மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றபோது மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மூன்று மணி நேரமே கால அவகாசம் வழங்கப்பட்டு மனைவியின் மரணச்சடங்கில் கலந்து கொண்டார்.

மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறியபோது அவரது மகளும்தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். தந்தை 2008 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையையும் தாயையும் இழந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கைதியை அவரின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்யும்படி கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .