வன்னியில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 92 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இதன் போது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்தன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், கமலேஸ்வரன், புவனேஸ்வரன், ரவிகரன் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.