வவுனியாவிலும் தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு

வவுனியாவிலும் தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை நேற்று வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில், நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வின் போது பத்திரிகையும் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முதல் பிரதியை வழங்கியுள்ளார்.

முதல் பிரதிகளை பங்களாளிக் கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் புதிய சுதந்திரன் பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை புதிய சுதந்திரன் பத்திரிகை வெளிப்படுத்தும் என இதன்போது பலரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.