புத்தபெருமான் கருதும் பௌத்தர்கள் இவர்களே: சிறீநேசன்

ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆள வேண்டும், ஒரு இனத்தை கண்டு இன்னொரு இனம் அஞ்சி வாழ வேண்டும் என்ற மனப்பாங்குடன் யாராவது செயற்பட முற்படுவார்கள் என்றால் நாடு குட்டிச்சுவராக மாற்றப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

சர்வதேசத்தின் மத்தியில் நாங்கள் ஒரு கௌரவமான நாடாக இருக்க வேண்டும், எமது நாட்டின் வரலாறுகள் மற்றும் எமது நாட்டின் முன்மாதிரிகள் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டக்கூடிய விதத்தில் இருக்க வேண்டுமென்றால் நாங்கள் பிழையான சிந்தனைகளையும் பிற்போக்கான சிந்தனைகளையும் களைய வேண்டும்.

புத்தபெருமானும்கூட எந்தவொரு இனத்திற்கும், எந்தவொரு மதத்திற்கும் கேடு விளைவிக்காமல் வாழ்கின்றவர்களையே உண்மையான பௌத்தன் என கருதுகின்றார்.

இந்த நாட்டில் நல்ல சிந்தனையுடைய பௌத்தர்கள் இருக்கின்ற போதிலும், நாட்டை குட்டிச்சுவராக்கக்கூடியவர்களும் எம்மத்தியில் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.