இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை முன்வைத்துள்ள அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இலங்கை அரசு தான் கூறிய எந்தவொரு வார்த்தைகளிலும் முன்னேற்றத்தை காட்டாத நிலையில், மனித உரிமைகள் ஆணையாளரின் யோசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,