சர்வமத தலைவர்களை சந்தித்த யாழ். மாநகரசபையின் புதிய மேயர்!

யாழ். மாநகரசபை மேயராக பதவியேற்றுள்ள இம்மாணுவேல் ஆர்னோல்ட் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயருக்கான தேர்வு இன்று காலை 9 மணிக்கு இடம் பெற்றுள்ளது.

இதன்போது முதலாம் கட்ட இரகசிய வாக்கெடுப்பில் 18 வாக்குகள் பெற்று இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஈ.பி.டி.பி விலகியதைத் தொடர்ந்து மாநகரசபை மேயராக ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று நண்பகல் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து ஆசிபெற்ற ஆர்னோல்ட், யாழ். மறைமாவட்ட ஆயர் மற்றும் ஆரியகுளம் நாகவிகாரைக்கும் இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டார்.