சாவகச்சேரி நகர சபை தலைவராக கூட்டமைப்பு பெண் உறுப்பினர் தெரிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் முன்னிலை ஆசனங்களை பெற்றிருந்த யாழ் சாவகச்சேரி நகர சபையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பெண் உறுப்பினர் நகரசபைதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரை தெரிவு செய்யும் அமர்வு வடமாகாணஉள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் இன்று மாலை சாவகச்சேரி நகரசபா மன்றத்தில் நடைபெற்றது.

18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆறு உறுப்பினர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐந்து உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பியினர் மூன்று உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்சுயேட்சைக்குழு ஆகியன தலா ஒரு உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

இன்றைய அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யோ.ஜெயக்குமாரை தலைவராக பிரேரித்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இராமநாதன் சிவமங்கை என்பவரைதமது கட்சி சார்பில் பிரேரித்தனர்.

இதனையடுத்து பகிரங்க வாக்களிப்பு நடைபெற்றதுடன் அதனடிப்படியில் 12 வாக்குகளை பெற்றுசாவகச்சேரி நகரசபையின் முதல் பெண் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்சார்பில் இராமநாதன் சிவமங்கை தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து சாவகச்சேரி நகரசபையின் உப தலைவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அருணாசலம் பாலமயூரன் பிரேரிக்கப்பட்டுதேர்ந்தெடுக்கப்பட்டார்.