ஜெனீவாவில் வைத்து முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ள சிறீதரன் எம்.பி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று முடிந்துள்ளது.

இதில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனீவா சென்றுள்ளார்.

இவ்வறான சந்தர்ப்பத்தில் அவர் ஜெனீவாவிற்கான இந்திய வதிவிட பிரதிநிதி, ஐ.நாவின் சிரிய நாட்டிற்கான விசேட மூத்த அதிகாரி ராஜா ஆறுமுகம், சென்னை கிங்ஸ் அணியின் உரிமையாளர், பெங்களூர் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மனித உரிமை பேராசிரியர் போல் நியூமன், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமன் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி கிருஸ்ணகுமார் போன்றோருடன் கலந்துரையாடியுள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.