புகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி

இலங்கையிலே புகையிரதப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், அனைத்து தூர இடங்களுக்கும் செல்லும் புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இருக்கின்றன.

ஆனால், இலங்கையினுடைய புகையிரதப் போக்குவரத்துப் பிரிவுக்கு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கின்றன.
வடக்குப் போக்குவரத்துச் சேவையிலே ஈடுபடுத்தப்படுகின்ற புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இல்லை. அதற்கு அரசியல் காரணம் இருக்கின்றது.

ஆகவே, அங்கே இருப்பவர்களுக்கு அந்த வசதியை வழங்காமல் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களுக்கு அதனை வழங்குகிறார்கள்.

இந்த வேறுபாடுகள் எதற்காகச் செய்யப்படுகின்றன?

குறிப்பாக, இந்த புகையிரதப் போக்குவரத்து தொடர்பாக நான் போக்குவரத்து அமைச்சரிடம் கேட்பதற்குரிய கேள்வியைக் கொடுத்து, இன்று 8 மாதங்கள் ஆகின்றன.

ஆனால், இதுவரை விடையளிக்கப்படவில்லை. காரணம், விடையளிக்க முடியாத ஒரு சூழ்நிலைக்குள் அவர் தள்ளப்பட்பட்டிருக்கிறாரென்று நான் நினைக்கின்றேன்.

இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றபொழுதுதான் இந்த நாட்டிலிருக்கின்ற மக்களுடைய நல்லெண்ணங்ளைச் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றார் .