யாழ். மாநகரசபை மேயரானார் ஆர்னோல்ட்!

யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவிற்காக இன்றைய தினம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முன்மொழியப்பட்ட இ.ஆர்னோல்ட் 18 வாக்குகளையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக முன்மொழியப்பட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும், ஈ.பி.டி.பி சார்பாக முன்மொழியப்பட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முன்மொழியப்பட்ட இ.ஆர்னோல்ட் யாழ்.மாநகரசபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், யாழ். மாநகரசபையின் பிரதி மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அத்துடன், கூட்டம் தற்போது நிறைவடைவதாகவும், அடுத்த கூட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் யாழ். மாநகரசபையின் புதிய மேயர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.