கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன்!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கிளாலி கிராமத்தில் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்துவரும் 20 பயனாளிகளுக்கு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த வலைகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம அலுவலர் பிரபாகரன் தலைமையில் கிளாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.