காரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரிவு!

காரைதீவுப் பிரதேசபையின் முதலாவது அமர்வு இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும், உபதவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எ.எம்.ஜாகீரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.