நல்லாட்சி அரசுக்கு ஏப்ரல் 2ம் திகதி வரை கால அவகாசம்! சுமந்திரன் பா.உ!

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையைஎதிர்காலத்திலாவது செயற்படுத்துவதற்கான சமிக்ஞைகள் ஏப்ரல் 2ம் திகதிக்குள்எமக்கு கிடைக்க வேண்டும். கிடைத்தால் மட்டுமே இந்த ஆட்சி தொடர்வதற்கு எங்களால்முடிந்தளவு முயற்சிப்போம்.எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிரானநம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுதொடர்பாக நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதேசுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேர ணை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பதென தீர்மானிப்பத ற்காக ஏப்ரல் மாதம் எமது நாடாளுமன்ற குழு கூடவுள்ளது.

அதற்கு முன்னர்தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன்பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்.

இந்த பேச்சுவார்த்தையின் போது 2015ம் ஆண்டு இந்த நல்லாட்சிஅரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை இனிமேலாவது நிறைவேற்ற வேண்டும் எனகூறுவோம்.

இதனடிப்படையில் இனிமேலாவது மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக இந்தஅரசாங்கம் நடந்து கொள்ளும் சமிக்ஞையை காண்பித்தால் இந்த அரசாங்கம்தொடர்வதற்கு எங்களால்இயன்ற சகல முயற்சிகளையும் எடுப்போம்.

மேலும் பிரதமருக்கு எதிரானநம்பிக்கையில்லா பிரேரணை என்பது பொது எதிரணியின் முதலாவது காய் நகர்த்தலாகும்.இதன் பின்னர் ஜனாதிபதிக்கும் இது நடக்கும். அதனை நாங்கள் நன்றாகஅறிந்திருக்கிறோம்.

இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் புதியஅரசியலமைப்பு உருவாக்க பணியை தொடங்கியிருந்தது. அந்த முயற்சி இப்போது இடைக்கட்டத்தில் நிற்கிறது. தொடர்ந்துநடக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவ்வாறான ஒரு கட்டத்தில் இந்தகூட்டரசாங்கம் விழுந்தால் ஒன்றுமே நடக்காமல் போகும்.

ஆகவே தான் நான் முன்னர்கூறியதை போல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவிடயங்களில் அரசு இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சமிக்ஞைகளை காண்பித்தால் இந்த அரசாங்கம்தொடர்வதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை செய்வோம். இல்லையேல் ஏப்ரல் மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.