பருத்தித்துறை நகர சபையும் கூட்டமைப்பு வசம்!

பருத்தித்துறை பிரதேச சபைக்கான முதல்வர் தெரிவு இடம்பெற்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட யோ.இருதயராசா 7 வாக்குகள் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை பருத்திதுறையில் நடைபெற்ற முதல்வர் தெரிவில் கூட்டமைப்பு பெரும்பான்மையை பெற்று கொண்டுள்ளது.

இதற்கமை கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட யோ.இருதயராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியனை விட ஒரு வாக்கினை கூடுதலாகப் பெற்று தவாசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மையை பெற்றிருந்த இந்தச் சபைகளில் தற்போது கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.