அரசியலமைப்பு உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது! – சுமந்திரன்

அனைத்து மக்களுக்கும் கொடுத்த ஆணையை நிறைவேற்றுகிற வண்ணமாக இந்த கூட்டரசாங்கம், முன்னேறுமாக இருந்தால் நல்லாட்சியை தொடர்ந்து வைத்திருக்கிற தேவை எமக்கு இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து யாழில் ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அவருக்கு எதிரான முதலாவது காய் நகர்த்தலாக இருந்தாலும், அதன் நோக்கம் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்காக முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதைய சூழலில் கூட்டு அரசாங்கம் வீழுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடு முற்றாகத் தடைபடக் கூடும் எனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இந்த அரசாங்கம் தொடர்ந்தும் இருந்த போதிலும் அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பதில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.