மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டடம் குணசீலன் திறந்து வைப்பு!

மன்னார் – யாழ். பிரதான வீதி பள்ளமடுவில் அமைக்கப்பட்ட மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டடம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தினை, வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.நியாஸ் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில், வட மாகாண விவசாய அமைச்சின் முக்கியஸ்தர்கள், வட மாகாண நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர்கள், மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக அதிகாரிகள், கிராம மக்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.