நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஜெனீவாவில்!

ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் நாடாளுமன்றங்கள் ஒன்றியத்தின் 138ஆவது மாநாட்டில், ‘நிலைத்தன்மை மற்றும் நெகிழ்திறன் கொண்ட சமூகத்தை நோக்கிய மாற்றம்’ என்கிற தலைப்பில் குழு நிலை விவாதம் இடம்பெற்றது.

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை அடைவதற்கு நிலையான அமைதியை ஒரு வாகனமாக்கிக்கொள்வது மற்றும் சட்டத்துக்குப்புறம்பான குடியேற்றங்களால் உலகம் எதிர்கொள்ளும் சவாலில் நாடாளுமன்றங்களின் பங்களிப்பைப் பலப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக குறித்த நாடாளுமன்றங்களின் ஒன்றியம் பணியாற்றி வருகின்றது.

விவாதத்தை முன்னகர்த்திய 5 பேர் கொண்ட குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் ஒருவராக இருந்தார்.

இக்கலந்துரையாடலில் சேர்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மிலோர்ட் மிஜாடோவிக், ஆர்ஜென்ரீனா நாட்டு செனட்டர் லுசிலா கிறசெல், லிசொதோ செனட்டர் பீட் லிசாஓனா பீட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த நாடியா இஸ்நர் ஆகியோர் கலந்துகொண்டனர்.