காரைதீவு பிரதேசசபைக்கு சென்ற மாவை எம்.பி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா காரைதீவு பிரதேசசபைக்கு சென்று, புதிய தவிசாளரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் காரைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், பிரதேசசபையின் புதிய தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கிழக்கு மாகாணா முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினரான சே.கலையமுதன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.