கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரினால் மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய, மீன்பிடி அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்தின் 2017ம் ஆண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் க.கேதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன் போது முறகொட்டான்சேனை, கித்துள், உறுகாமம், உன்னிச்சை பிரதேசங்களைச் சேர்ந்த நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கு மீன்பிடி வலைகள் கையளிக்கப்பட்டன.

தலா ஒரு லட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.