யாழில் தந்தை செல்வாவின் 120ஆவது பிறந்த தின அனுஸ்டிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிறுவக தலைவர் தந்தை செல்வாவின் 120ஆவது பிறந்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரிலுள்ள செல்வா சதுக்கத்திலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அத்துடன் தந்தை செல்வநாயகத்தின் சமாதியிலும் அரசியல் பிரமுகர்களினால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வட மாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.