ரணில் செய்த துரோகமே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சீ.யோகேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு ரணில் செய்த துரோகமே, ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையாக வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி இந்த தேசிய அரசாங்கத்தினை குழப்பி தான் பிரதமராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் வரலாம் என நினைக்கின்றார். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் துணைபோகின்றனர்.

மகிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க முடியாது. எனினும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற குழுக்கூட்டம் கூடி தீர்மானம் எடுக்கும்.

நாடாளுமன்றத்தினை கலைத்து நாடாளுமன்ற தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்று கருதியே கூட்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு பேரணிகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.