வடக்கு முதல்வருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் யாழில் சந்திப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இந்த சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நிதி மூலக் கூற்றுகள் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.