வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இந்த அனுஸ்டிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி.சிவமோகன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.