இவ்வாண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட முதலாவது அபிவிருத்தி குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

இதில் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னதாக மறைந்த பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் மற்றும் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஐயாத்துரை ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 28.08.2018 இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டது.