ஈபிடிபியின் ஆதரவுடன் பதவிகளை பெற்றுக்கொண்டமை மிகத் தவறானது: சரவணபவன்!

உள்ளுராட்சி மன்றங்களில் ஈபிடிபியின் ஆதரவுடன் பதவிகளை பெற்றுக்கொண்டமை மிகத் தவறானது.

கடசித் தலைமைகளின் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(02) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவரிடம் ஈபிடிபியின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களில் பதவிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் உங்களின் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எந்தக் கட்டத்திலும் நான் இதற்கு ஆதரவு இல்லை இந்த விடயங்கள் நடந்தேறிய போது நான் ஜெனீவாவில் இருந்தேன் எனவே இது தொடர்பில் கட்சியின் தலைமைகள் எனக்கு அறிவிக்கவில்லை கூடி கலந்துரையாடப்படவும் இல்லை, எனவே கட்சியின் இந்தக் கொள்கை மிகத் தவறானது.

கட்சியின் தலைமை இவ்வாறு தீர்மானம் எடுத்திருந்தாலும் அது தவறானது அடுத்து பாராளுமன்ற அமர்வு முடிந்த பின்னர் இது தொடர்பில் நான் அறிக்கை ஒன்றையும் வெளியிடுவேன் என அவர் தெரிவித்தார்.