ஜனாதிபதியை சந்தித்த கூட்டமைப்பு பேசியது இதுதான்: சுமந்திரன் வெளியிட்ட தகவல்

2015ம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்து பேசியிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தான் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும், மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

அத்துடன், வழங்கப்பட்ட வலுவான சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்தே, குறியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.